Pages

Total Pageviews

Wednesday, October 30, 2013

2013 தீபாவளி படங்கள்


இந்த வருட தீபாவளிக்கு அஜீத், கார்த்தி, விஷால் ஆகிய 3 கதாநாயகர்கள் நடித்த படங்கள் வெளிவருகின்றன

அஜீத் படம்

1. ஆரம்பம்: அஜீத்குமார் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். இன்னொரு ஜோடியாக ஆர்யா–டாப்சி நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் டைரக்டு செய்து இருக்கிறார். சத்யசாய் மூவீஸ் தயாரித்துள்ளது.

நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை கதாநாயகன் தேடிக்கண்டுபிடித்து பழிவாங்கும் கதை இது. மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படம் வியாழக்கிழமை 31/10/2013 திரைக்கு வருகிறது



கார்த்தி படம்
2. ஆல் இன் ஆல் அழகுராஜா: இது, கார்த்தி நடித்த படம். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருக்கிறார். ராஜேஷ் எம். டைரக்டு செய்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து இருக்கிறார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. கார்த்தியும், காஜல் அகர்வாலும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதையும் மீறி, இருவரும் காதலில் எப்படி வெற்றி பெறுகிறார்கள்? என்பதே கதை.

விஷால் படம்
3. பாண்டிய நாடு: விஷால் நடித்து, தயாரித்துள்ள படம் இது. அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சுசீந்திரன் டைரக்டு செய்து இருக்கிறார்.

இது, பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம். விஷாலுக்கு அப்பாவாக டைரக்டர் பாரதிராஜா நடித்து இருக்கிறார். மதுரை பின்னணியில் கதை சம்பவங்கள் நிகழ்கின்றன. கதைப்படி, விஷால் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்துகிறார். காஜல் அகர்வால், பள்ளிக்கூட ஆசிரியை.
பிரச்சினைகளை பார்த்து விலகிப் போகிற சராசரி இளைஞரான விஷால், ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி மாறுகிறார், எதிரிகளை எப்படி பழிவாங்குகிறார்? என்பதே படத்தின் கதை

No comments:

Post a Comment